NEET UG 2024 Results: தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நீட் தேர்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். நீட் தேர்வு முடிவு உடன், தேசிய தேர்வு முகமை கட்-ஆஃப் மதிப்பெண்களையும் அறிவிக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க:
கடந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் சதவீதம் 50 ஆகவும், ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் இருந்தது. நீட் தேர்வுக்கான அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் தேர்வின் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கும்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை பகுப்பாய்வு செய்து, மோஷன் எஜூகேசன் (Motion Education) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ (CEO) நிதின் விஜய் கூறினார்: “நடந்து முடிந்த நீட் தேர்வு, ஆர்வலர்களிடமிருந்து வலுவான செயல்திறனை எதிர்பார்க்க வழிவகுத்தது. கடந்த ஆண்டு நீட் கட்-ஆஃப் உயர்வு இருந்தபோதிலும், இந்த ஆண்டு, அனைத்து பிரிவினருக்கும் கட்-ஆஃப் சற்று குறையும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 720-130 ஆகவும், எஸ்.சி பிரிவு கட்-ஆஃப் 129-108 ஆகவும், எஸ்.டி பிரிவு கட்-ஆஃப் 128-106 ஆகவும், ஓ.பி.சி பிரிவு கட்-ஆஃப் 130-108 ஆகவும் இருக்கலாம்.”
2023 இல் பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் 2022 இல் 715-117 இல் இருந்து 720-137 ஆக அதிகரித்தது. மற்ற பிரிவினருக்கும் இதே முறை காணப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினகளுக்கான கட்-ஆஃப் 2022 இல் 116-93 இல் இருந்து 2023 இல் 136-107 ஆக அதிகரித்தது.
NEET UG 2024: முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் போக்குகள்
இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 அன்று 24 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்றது. மே 29 அன்று விடைத்தாள்கள் வெளியிடப்பட்டன மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகளுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவு ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய தேர்வு முகமை ஆதாரம் ஒன்று indianexpress.com க்கு மே 31 அன்று தெரிவித்தது. கடந்த ஆண்டு, நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது, முடிவு ஜூன் 13 அன்று அறிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“