மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் என்.ஆர்.ஐ (BDS NRI) மற்றும் பிற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று சீட் மேட்ரிக்ஸை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங்கிற்காக வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024: Round one seat matrix for MBBS, BDS, NRI out at mcc.nic.in
ஆவணங்களின் ஆய்வுக்குப் பிறகு இந்தியர்களில் இருந்து என்.ஆர்.ஐ பிரிவாக மாற்றப்பட்ட 1,037 விண்ணப்பதாரர்களின் பட்டியலை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி வெளியிட்டுள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நீட் கவுன்சிலிங் பதிவு இரண்டு நாட்களில் முடிவடையும் என்பதை விண்ணப்பதாரர்கள் அறிந்திருக்க வேண்டும்.
பிரிவை இந்தியரிலிருந்து என்.ஆர்.ஐ.க்கு மாற்றப்பட்ட மருத்துவ ஆர்வலர்கள் தங்களுக்கு என்.ஆர்.ஐ இருக்கை ஒதுக்கப்பட்டால், கல்லூரியில் சேர்க்கைப் பெறும் நேரத்தில் அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ கவுன்சலிங் கமிட்டியின் உத்தரவை அவர்கள் பின்பற்றத் தவறினால் அங்கு சேர்க்கை ரத்து செய்யப்படலாம்.
நீட் கவுன்சலிங் முதல் ரவுண்ட் சாய்ஸ் ஃபில்லிங் ஆகஸ்ட் 16 முதல் விண்ணப்பதாரர்களுக்குத் திறக்கப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று முடிவடையும். சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் நீட் 2024 தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விருப்பப்படி படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
நீட் முதல் கட்ட கவுன்சிலிங்கில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 20 (இரவு 11:55 மணி)க்குள் சாய்ஸ் ஃபில்லிங்கிற்குள் நுழைய முடியும், கல்லூரிகளை உறுதிசெய்து ஆகஸ்ட் 20 மாலை 4 மணி முதல் மாலை 11.55 மணி வரை சமர்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் பல தேர்வுகளை நிரப்ப முடியும். இருப்பினும், தகுதியான விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் தேர்வுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், தேர்வுகள் முன்னுரிமை வரிசையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் கவுன்சிலிங் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற மருத்துவ ஆர்வலர்கள் ‘சாண்டேஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“