ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள் தொடர்பாக பெறப்பட்ட பல குறைகளை நிவர்த்தி செய்யவும் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு வசதி செய்யவும், நீட் தேர்வின் (NEET UG 2024) விண்ணப்பதாரர் தரவை இந்திய அரசின் உமாங் (UMANG) மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) தளங்களில் பதிவேற்ற தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
நீட் தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் உறுதிப்படுத்தல் பக்கம், மதிப்பெண் அட்டை மற்றும் ஓ.எம்.ஆர் விடைத்தாள் ஆகியவற்றை இந்த தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
“அனைத்து தேர்வர்களும் மேலே உள்ள தளங்களில் உள்நுழைந்து தங்கள் ஆவணங்களை நேரடியாக அணுக ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கை விண்ணப்பதாரர்களின் ஓ.எம்.ஆர் தாள்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்து தீர்க்கிறது. இந்த முயற்சியானது அத்தியாவசிய தேர்வு ஆவணங்களை எளிதாகவும் விரைவாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் இந்த நடவடிக்கையின் மூலம் தீர்க்கப்படும் என்று கருதப்படும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, (NEET UG) 2024 மே 5 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 முதல் 5:20 வரை பேனா மற்றும் காகித முறையில் நடத்தியது. இந்தியா முழுவதும் 557 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் வெவ்வேறு இடங்களில் தேர்வு நடைபெற்றது. 1563 தேர்வர்களுக்கான மறுதேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இறுதி முடிவு ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது — nta.ac.in.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“