நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு இன்று (மே 5) நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாநகரில் மொத்தம் 13 மையங்களில் 6500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/8b648f09-ed1.jpg)
/indian-express-tamil/media/post_attachments/ed44f98d-891.jpg)
பிற்பகல் 2 மணி அளவில் நீட் தேர்வு துவங்கியது. இத்தேர்வினை எழுத வந்த மாணவர்களை தீவிரமாக பரிசோதனை செய்த பின்பு காவலர்கள் தேர்வு எழுத அனுமதித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/4a81d9e3-2f6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/4967680d-4d0.jpg)
ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் மாணவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/11189cc2-fb1.jpg)
/indian-express-tamil/media/post_attachments/4d56bdf9-937.jpg)
தேர்வு எழுத வந்த பெண்கள் காதணி, செயின் உள்ளிட்ட நகைகளை அணிவதற்கு அனுமதிக்கவில்லை. அதே போல் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த விதமான மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/8b9894ba-01b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/b065d87c-693.jpg)
தேர்வு மையங்களின் வாசலில் காவல்துறையினர் மாணவ மாணவிகளை தீவிரமாக பரிசோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“