தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வு (NEET UG 2024) தொடர்பான மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நாளை (ஜூலை 18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கின் இரண்டாவது விசாரணையை தொடர முடியாததால், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரணையை புதிய தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீட் தேர்வை நடத்துவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசாரணைப் பட்டியலின்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த வழக்கை ஜூலை 18 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கிறார்.
முந்தைய விசாரணையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பான நிலை அறிக்கையை சி.பி.ஐ பதிவு செய்திருப்பதைக் குறிப்பிட்டு, இரு தரப்புகளின் கூட்டு கோரிக்கை மீதான விசாரணையை ஒத்திவைக்க முடிவு செய்தது.
மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அசாதாரணமாக இல்லை, பெரிய முறைகேடு அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பயனடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை ஐ.ஐ.டி சென்னை நடத்திய தரவு பகுப்பாய்வு காட்டுகிறது என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
"மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் குறிப்பாக 550 முதல் 720 வரை ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. இந்த அதிகரிப்பு பல்வேறு நகரங்கள் மற்றும் பல்வேறு மையங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டதே காரணம். இது "முறைகேடுக்கான வாய்ப்பு குறைவு" என்பதைக் குறிக்கிறது” என்று மத்திய அரசு தெரிவித்தது.
முன்னதாக, வினாத்தாள் கசிவின் தன்மை, வினாத்தாள் கசிவுகள் நடந்த இடங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்படுவதற்கும் தேர்வு நடத்துவதற்கும் இடையிலான கால தாமதம் குறித்து முழுத் தகவலை வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் நிலை மற்றும் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பொருள்களைக் குறிக்கும் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
இதனிடையே, நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த மனுக்கள் மீது மனுதாரர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, விடுமுறைக்கால பெஞ்ச் ஜூன் 14 அன்று தேசிய தேர்வு முகமையின் இதேபோன்ற மனுக்கள் மீது மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையில், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) ஜூலை 16 அன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிகாரப்பூர்வ போர்ட்டலான - mcc.nic.in இல் தங்கள் இடங்களுக்குள் நுழைய அழைப்பு விடுத்தது. 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து இருந்து ஜூலை 20 ஆம் தேதி முதல் எம்.சி.சி போர்ட்டலில் இருக்கை விவரங்களை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி ஏற்கும்.
கல்வி நிறுவனங்களால் போர்ட்டலை அணுகுவதற்கான பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் ஆகியவை முந்தைய ஆண்டுகளைப் போலவே இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ அல்லது புதிய கடவுச்சொல்லை உருவாக்க விரும்பினாலோ, அவர்களுக்கு ‘மறந்துவிட்ட கடவுச்சொல்’ என்ற வசதி மேலும் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“