Advertisment

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை; ரவுண்ட் 2 கவுன்சலிங் கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கவுன்சலிங் ரவுண்ட் 2 கால அவகாசம் நீட்டிப்பு; சீட் ஒதுக்கீடு எப்போது?

author-image
WebDesk
New Update
MBBS

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்ற 13,417 பேரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 399 எம்.பி.பி.எஸ் இடங்கள், 727 பி.டி.எஸ் இடங்கள் காலியாக இருந்தன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 23 பி.டி.எஸ் இடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 2 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. மேலும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,024 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 839 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாகவுள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 6 மாணவர்கள், அகில இந்திய கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று சென்றுவிட்டனர். 

இதற்கிடையில், மருத்துவ கல்லுாரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதால் காலியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாய்ஸ் ஃபில்லிங் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவகல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கல்லுாரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20 ஆம் தேதி காலை 10 முதல் 23 ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம். சீட் ஒதுக்கீடு விவரங்கள் 26 ஆம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்ற மாணவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment