தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து சீட் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்று மருத்துவ கவுன்சலிங் முடிவில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட் ஆஃப் எவ்வளவு இருந்தது என்பது மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 36 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 651 ரேங்க் – 1346
பி.சி
கட் ஆஃப் – 620 ரேங்க் – 3180
பி.சி.எம்
கட் ஆஃப் – 612 ரேங்க் – 3709
எம்.பி.சி
கட் ஆஃப் – 603 ரேங்க் – 4401
எஸ்.சி
கட் ஆஃப் – 536 ரேங்க் – 10158
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 463 ரேங்க் – 15681
எஸ்.டி
கட் ஆஃப் – 488 ரேங்க் – 14019
22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 607 ரேங்க் – 4141
பி.சி
கட் ஆஃப் – 584 ரேங்க் – 5019
பி.சி.எம்
கட் ஆஃப் – 579 ரேங்க் – 6394
எம்.பி.சி
கட் ஆஃப் – 574 ரேங்க் – 6838
எஸ்.சி
கட் ஆஃப் – 494 ரேங்க் – 13565
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 427 ரேங்க் – 18116
எஸ்.டி
கட் ஆஃப் – 413 ரேங்க் – 18925
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“