/indian-express-tamil/media/media_files/qPolrUXgi3tdACrYn3KU.jpg)
தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரண்டாம் சுற்று மருத்துவ கவுன்சலிங்கில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட் ஆஃப் எவ்வளவு இருந்தது என்பது மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. முதல் சுற்று கட் ஆஃப் மதிப்பெண்ணை விட இரண்டாம் சுற்றுக்கு ஒரு கட் ஆஃப் தான் குறைந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான ரவுண்ட் 2 கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 650
ரேங்க் – 1414
பி.சி
கட் ஆஃப் – 619
ரேங்க் – 3280
பி.சி.எம்
கட் ஆஃப் – 612
ரேங்க் – 3715
எம்.பி.சி
கட் ஆஃப் – 602
ரேங்க் – 4486
எஸ்.சி
கட் ஆஃப் – 535
ரேங்க் – 10235
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 463
ரேங்க் – 15681
எஸ்.டி
கட் ஆஃப் – 477
ரேங்க் – 14702
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ரவுண்ட் 2 கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 606
ரேங்க் – 4187
பி.சி
கட் ஆஃப் – 583
ரேங்க் – 6061
பி.சி.எம்
கட் ஆஃப் – 578
ரேங்க் – 6491
எம்.பி.சி
கட் ஆஃப் – 574
ரேங்க் – 6857
எஸ்.சி
கட் ஆஃப் – 494
ரேங்க் – 13573
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 418
ரேங்க் – 18631
எஸ்.டி
கட் ஆஃப் – 407
ரேங்க் – 19296
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.