தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 1101 எம்.பி.பி.எஸ், 919 பி.டி.எஸ் இடங்கள் காலி; 2-ம் சுற்று பதிவு ஆரம்பம்
NEET UG 2024: தமிழக மருத்துவ கல்லூரிகளில் 1101 எம்.பி.பி.எஸ், 919 பி.டி.எஸ் இடங்கள் காலி; இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்; காலியிடங்களின் முழு விபரம் இங்கே
தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் எவ்வளவு உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. வருகின்ற 13 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும். முடிவுகள் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்று மிஸ்பா கேரியர் அகாடமியின் யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 77 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 828 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 268 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி பல்கலைக்கழகங்களில் 196 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 52 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 80 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் 7.5% ஒதுக்கீட்டு 4 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 839 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டுக்கு 19 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 624 பி.டி.எஸ் காலியாக உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“