நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெற்றது. நாடே எதிர்ப்பார்த்த இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அகில இந்திய தேர்ச்சி சதவீதத்தை விட அதிகமாக இருந்தது.
இந்தநிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் ஆனந்தமூர்த்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, நீட் தேர்வு கட் ஆஃப் அதிகரிக்கும். தேர்வு எளிமையாக இருந்தது, மற்றும் மாணவர்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக கட் ஆஃப் நிச்சயம் உயரும். குறிப்பாக அகில இந்திய தரவரிசைப்படி கட் ஆஃப் 50 முதல் 85 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் தமிழக கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும்போது தான் உண்மையான கட் ஆஃப் நிலை தெரிய வரும். அதேநேரம் தமிழக கவுன்சிலிங்கிலும் நீட் தேர்வு கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 முதல் 50 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு ஏற்ப இந்த அளவு மாறுதலுக்குட்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“