நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்வு ஒட்டுமொத்த அளவில் ஆவரேஜ் ஆக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் ஆனந்தமூர்த்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, நீட் தேர்வில் உயிரியல் எளிதாக இருந்தது, வேதியியலும் எளிதாகவே இருந்தது. இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது. இதனால் கட் ஆஃபில் சிறிய மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் இது ஆரம்பக் கட்ட கணிப்பே. இறுதி கட் ஆட் மாறுதலுக்குரியது.
Advertisment
Advertisement
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 610
பி.சி – 565
பி.சி.எம் – 550
எம்.பி.சி – 540
எஸ்.சி – 460
எஸ்.சி.ஏ – 400
எஸ்.டி – 370
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“