/tamil-ie/media/media_files/uploads/2023/07/mbbs-students.jpg)
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சலிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவு, 7.5 சதவீத பிரிவுகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
அரசு மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கவுன்சலிங் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 649
பி.சி – 621
பி.சி.எம் – 614
எம்.பி.சி – 604
எஸ்.சி – 535
எஸ்.சி.ஏ – 471
எஸ்.டி – 494
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கவுன்சலிங் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 601
பி.சி – 574
பி.சி.எம் – 569
எம்.பி.சி – 563
எஸ்.சி – 484
எஸ்.சி.ஏ – 411
எஸ்.டி – 408
அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5% சிறப்பு கவுன்சலிங் கட் ஆஃப்
பி.சி – 507
பி.சி.எம் – 501
எம்.பி.சி – 529
எஸ்.சி – 472
எஸ்.சி.ஏ – 491
எஸ்.டி – 440
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 7.5% சிறப்பு கவுன்சலிங் கட் ஆஃப்
பி.சி – 480
பி.சி.எம் – 464
எம்.பி.சி – 506
எஸ்.சி – 449
எஸ்.சி.ஏ – 469
எஸ்.டி – 411
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.