NEET Counselling: திருத்தப்பட்ட நீட் ரிசல்ட் வெளியீடு; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?
NEET UG 2024: நீட் தேர்வு திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு; கவுன்சலிங் தேதிகள் அறிவிப்பு; தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன?
நீட் தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, கவுன்சலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தப்பட்டு, இறுதி முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதனையடுத்து அகில இந்திய கவுன்சலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநில கவுன்சலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் டாக்டர் ஆனந்தமூர்த்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, கடந்த கால போக்குகளைப் பார்க்கும் போது விண்ணப்பித்தவர்களில் 5-7ல் ஒருவருக்கு அவரவர் பிரிவுகளை பொறுத்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிச்சயம் கட் ஆஃப் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 650
பி.சி – 620
பி.சி.எம் – 600
எம்.பி.சி – 590
எஸ்.சி – 530
எஸ்.சி.ஏ – 480
எஸ்.டி – 440
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“