NEET Counselling: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? சென்ற ஆண்டை விட எவ்வளவு அதிகரிக்கும்?
NEET UG 2024: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதல் சுற்று நீட் கவுன்சலிங் கட் ஆஃப் எப்படி இருக்கும்? சென்ற ஆண்டை விட எவ்வளவு அதிகமாக இருக்கும்?
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சலிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் முதல் சுற்று கவுன்சலிங்கிற்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் சுற்றுக்கான நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் ஆனந்தமூர்த்தி எவர்கிரீன் கைடன்ஸ் என்ற தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, இது அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் சுற்று கவுன்சலிங்கிற்கு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மட்டுமே. இறுதி கட் ஆஃப் அல்ல. இறுதி கட் ஆஃப் இதைவிட குறைவாக இருக்கும். எனவே கீழ்கண்ட கட் ஆஃப் மதிப்பெண்களில் உள்ளவர்கள் தங்களுக்கு இடம் கிடைக்காது என்று நினைக்க வேண்டாம். அடுத்த சுற்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு நிலவரம்
பொதுப் பிரிவு – 606
பி.சி – 560
பி.சி.எம் – 542
எம்.பி.சி – 532
எஸ்.சி – 452
எஸ்.சி.ஏ – 383
எஸ்.டி – 355
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 652
பி.சி – 621
பி.சி.எம் – 615
எம்.பி.சி – 604
எஸ்.சி – 537
எஸ்.சி.ஏ – 471
எஸ்.டி – 492
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“