தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாம் சுற்றுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாம் சுற்று நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் டாக்டர் ஆனந்தமூர்த்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாம் சுற்றுக்கு 170-180 இடங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் சீட் பெறுவதை பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடும்.
இந்த ஆண்டு ரவுண்ட் 1 கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 651
பி.சி – 620
பி.சி.எம் – 612
எம்.பி.சி – 603
எஸ்.சி – 536
எஸ்.சி.ஏ – 463
எஸ்.டி – 488
இந்த ஆண்டு ரவுண்ட் 1 ரேங்க்
பொதுப் பிரிவு – 1346
பி.சி – 1948
பி.சி.எம் – 204
எம்.பி.சி – 1071
எஸ்.சி – 664
எஸ்.சி.ஏ – 133
எஸ்.டி – 43
இந்த ஆண்டு ரவுண்ட் 2 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 649
பி.சி – 617
பி.சி.எம் – 611
எம்.பி.சி – 602
எஸ்.சி – 533
எஸ்.சி.ஏ – 463
எஸ்.டி – 488
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“