Advertisment

MBBS Counselling: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு ஆன்லைன் பதிவு தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?

Tamilnadu MBBS BDS Counselling 2024: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்; ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
New Update
mbbs students

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 31) முதல் தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகரில் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 11,500 இடங்கள் உள்ளன.

அரசு கல்லூரிகளில் உள்ள 5,050 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 250 பி.டி.எஸ் இடங்களில் இருந்து 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். எஞ்சியுள்ள 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும்.

இதில், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களில் மட்டும், மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான 10% (இ.டபிள்யூ.எஸ்) இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேபோல, தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம், தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் அரசு மருத்துவ கல்லூரி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் வழங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கலந்தாய்வுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அரசு ஒதுக்கீட்டுக்கு பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ஆகும். அதேநேரம் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வைப்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை. எனினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வைப்புத் தொகையாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 30 ஆயிரம் கட்ட வேண்டும். இது நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.1 லட்சமாக உள்ளது. 

சேர்க்கையின்போது அல்லது டிசம்பர் 31, 2024 தேதி விண்ணப்பதாரருக்கு 17 வயது முடிந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. 
மேலும் விவரங்கள் தெரிந்துக் கொள்ள https://tnmedicalselection.net/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கையைப் பார்வையிடவும்.

விண்ணப்பிப்பது எப்படி?

அறிவிக்கையைப் படித்த பிறகு, மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் உங்கள் அடிப்படை விவரங்களை புதிதாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். தொடர்ந்து தேவையான தகவல்களைப் பதிவுசெய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும்.

இதனிடையே தமிழகத்தில் 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதியதில், 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Mbbs Counselling NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment