Advertisment

NEET UG: நீட் தேர்வில் தமிழக டாப்பர்களின் எண்ணிக்கை சரிவு; ஒருவர் மட்டும் முதலிடத்தை தக்கவைப்பு

நீட் தேர்வு இறுதி முடிவுகளின்படி தமிழ்நாடு டாப்பர் எண்ணிக்கை 8லிருந்து ஒன்றாக குறைந்தது; ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகம்

author-image
WebDesk
New Update
neet reg

தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட திருத்தப்பட்ட நீட் தேர்வு (NEET UG 2024) இறுதி முடிவுகளின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு முதல் தரவரிசைப் பெற்றவர்களில் ஒருவர் மட்டுமே அந்த இடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்திய அளவில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 17 ஆக குறைந்துள்ளது.

Advertisment

நீட் தேர்வில் இயற்பியல் கேள்விக்கான ஆப்ஷன்களில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் டெல்லி ஐ.ஐ.டி நிபுணர்கள் குழுவை கேட்டுக் கொண்டது. அந்த நிபுணர்கள் குழு ஒரே ஒரு ஆப்ஷனை இறுதி விடையாக அறிவித்தது. அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் ஒட்டுமொத்த டாப்பர் எண்ணிக்கை சரிந்துள்ளது. மற்றும் பல்வேறு மாணவர்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வின் முந்தைய முடிவுகளின்படி, தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். ஆனால், திருத்தப்பட்ட முடிவுகளின்படி, 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த பி.ரஜனீஷ் மட்டுமே இறுதிப் பட்டியலில் டாப்பராக உள்ளார். முன்பு 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்த மற்ற ஏழு மாணவர்களின் மதிப்பெண்கள் தற்போது 715 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் புதிதாக 2 மாணவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்தவகையில், இந்திய அளவில் முதல் 100 தேர்வர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் உள்ளனர்.

நீட் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தை ஓரளவுக்கு குறைத்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வெழுதிய 1,52,920 மாணவர்களில் 89,426 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். திருத்தப்பட்ட பட்டியலின்படி எண்ணிக்கை 89,198 ஆக குறைந்துள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதமும் 58.47 இலிருந்து 58.30 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ளது, தேர்வில் 54.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 1,44,516 மாணவர்களில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதற்கிடையில், திருத்தப்பட்ட முடிவுகள் வெளியான பிறகு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கட்-ஆஃப் இரண்டு மதிப்பெண்கள் குறைந்துள்ளது. திருத்தப்பட்ட முடிவுகளின்படி, பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் 720-164 இல் இருந்து 720-162 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவினருக்கு கட் ஆஃப் 161-127 ஆக உள்ளது. பொதுப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 161-144 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 143-127 ஆகவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment