நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள் எவை என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பை தேர்ந்தெடுப்பார். நீட் தேர்வில் சற்று குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவ படிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையாக விரும்பப்படுவது பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பாகும்.
இந்தநிலையில், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையின்படி இந்தியாவில் உள்ள சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம். இதில் டாப் 8 இடங்களில் தமிழகத்தில் உள்ள இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பானது, கற்பித்தல் தரம், மாணவர் ஆதரவு மற்றும் ஆராய்ச்சி வசதிகள் போன்ற பல்வேறு அளவுகோல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளை வரிசைப்படுத்துகிறது.
சமீபத்திய NIRF தரவரிசையின்படி இந்தியாவில் உள்ள டாப் 10 பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கே:
NIRF 2023 தரவரிசை
1). சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
2). மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மணிபால், கர்நாடகா
3). டாக்டர் டி.ஒய்.பாட்டீல் வித்யாபீடம், புனே, மகாராஷ்டிரா
4). மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
5). ஏ.பி.ஷெட்டி நினைவு பல் அறிவியல் நிறுவனம், மங்களூரு, கர்நாடகா
6). எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை, தமிழ்நாடு
7). ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
8). மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர், கர்நாடகா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“