நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் (NEET UG 2024) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும். NEET UG 2024 மே 5 ஆம் தேதி நடைபெறும், இதில் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
Advertisment
நாட்டில் உள்ள 645 மருத்துவம், 318 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மற்றும் 47 BVSc மற்றும் AH கல்லூரிகளில் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே நாடு முழுவதும் உள்ள 27,868 இளங்கலை பல் மருத்துவ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும்., 50 அரசு கல்லூரிகளில் 3,513 இடங்களுக்கும், சுயநிதி பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட 263 தனியார் கல்லூரிகளில் 23,620 இடங்களுக்கும் கடந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்றது.
இந்தநிலையில், இந்தியாவின் சிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF 2023) படி நாட்டின் சிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்
பல் மருத்துவக் கல்லூரி
மாநிலம்
தரவரிசை
சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை
தமிழ்நாடு
1
மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மணிப்பால்
கர்நாடகா
2
டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீடம், புனே
மகாராஷ்டிரா
3
மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி
டெல்லி
4
ஏ.பி ஷெட்டி மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்சஸ், மங்களூரு
கர்நாடகா
5
எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
தமிழ்நாடு
6
ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
தமிழ்நாடு
7
மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர்
கர்நாடகா
8
சிக்ஷா `ஓ` அனுசந்தன், புவனேஸ்வர்
ஒடிசா
9
ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புது தில்லி
டெல்லி
10
JSS பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மைசூர்
கர்நாடகா
11
அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
தமிழ்நாடு
12
பல் மருத்துவ அறிவியல் முதுகலை நிறுவனம், ரோஹ்தக்
ஹரியானா
13
எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர்
கர்நாடகா
14
அரசு பல் மருத்துவக் கல்லூரி, நாக்பூர்
மகாராஷ்டிரா
15
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, சென்னை
தமிழ்நாடு
16
தத்தா மேகே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வார்தா
மகாராஷ்டிரா
17
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
உத்தரப்பிரதேசம்
18
நாயர் மருத்துவமனை பல் மருத்துவக் கல்லூரி, மும்பை
மகாராஷ்டிரா
19
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, புவனேஸ்வர்
ஒடிசா
20
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“