தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் புல்லட்டின் படி, நீட் தேர்வு (NEET UG 2024) முடிவுகள் ஜூன் 14 அன்று வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு அல்லது NIRF தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெறுவதற்கு முன் NIRF தரவரிசையை சரிபார்ப்பது நல்லது. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கிய தன்மை, மற்றும் உணர்தல் ஆகிய இந்த அளவுருக்களின் அடிப்படையில் NIRF ஒவ்வொரு நிறுவனத்தையும் தரவரிசைப்படுத்துகிறது.
NIRF 2023 இன் படி இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்
இந்த ஆண்டு MBBS, BAMS, BUMS, BHMS போன்ற படிப்புகளில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற விரும்பினால், NIRF 2023 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் எந்த மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1). அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ், டெல்லி)
2). முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER சண்டிகர்)
3). கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி., வேலூர்)
4). தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ், பெங்களூர்)
5). ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர், புதுச்சேரி)
6). அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (கோவை)
7). சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGIMS, லக்னோ)
8). பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU, வாரணாசி)
9). கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி (கே.எம்.சி, மணிப்பால்)
10). ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SCTIMST, கேரளா)
NIRF 2023 இன் படி இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்
1). சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ்
2). மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி
3). டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீடம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“