Advertisment

NEET UG 2024: நீட் தேர்வு சிலபஸ் குறைப்பு; நீக்கப்பட்ட பகுதிகளின் விவரம் இங்கே

NEET UG 2024: பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது ஏன்; நீக்கப்பட்ட பகுதிகள் எவை? சேர்க்கப்பட்ட பகுதிகள் எவை?

author-image
WebDesk
New Update
neet exam

NEET UG 2024: பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது ஏன்; நீக்கப்பட்ட பகுதிகள் எவை? சேர்க்கப்பட்ட பகுதிகள் எவை?

கட்டுரையாளர் : Mridusmita Deka

Advertisment

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கடந்த வாரம் மருத்துவ நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2024 பாடத்திட்டத்தை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வின் பாடத்திட்டத்தை அறிவித்து வந்த நிலையில், ​​இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) நீட் தேர்வு பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024: Why did NMC issue syllabus; here’s a look at deleted, added chapters

2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சி.பி.எஸ்.இ வாரியம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைத்தது, ஆனால் நீட் பாடத்திட்டம் அப்படியே இருந்தது.

மே 2023 இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, மனுதாரரான டாக்டர் அரவிந்த் கோயல், மாணவர்கள் தங்கள் திருப்புதல்களைத் திட்டமிடும் வகையில் பாடத்திட்டத்தை விரைவாக அறிவிக்க கோரினார் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட NCERT புத்தகங்களின்படி இந்த ஆண்டு நீட் தேர்வின் பாடத்திட்டத்தை மறுவடிவமைக்க வலியுறுத்தினார்.

சி.பி.எஸ்.இ 2020 ஆம் ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு பரிந்துரைத்த பாடத்திட்டத்தில் இருந்து சில பாடங்கள் மற்றும் உரையின் பகுதிகளை நீக்கியுள்ளது. இருப்பினும், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தேசிய தேர்வு முகமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த பாடங்கள் மற்றும் தலைப்புகள் NCERT பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்தே தேர்வுக்கு தயாராக முடிந்தது. இந்த ஆண்டு, 2023-24 அமர்வுக்கான NCERT பாடப்புத்தகங்களிலிருந்து சில உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதால் நிலைமை வேறுபட்டது,” என்று பொதுநல மனுவில் மனுதாரர் கூறினார்.

2020ல் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டாலும், நீக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் தேசிய தேர்வு முகமை கேள்விகளைக் கேட்டதாக, இப்போது எம்.பி.பி.எஸ் முதல் ஆண்டில் படிக்கும் அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி திப்ருகாரின் மாணவர் கூறினார். நீட் யு.ஜி பாடத்திட்டத்தை அறிவிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கையை பாராட்டிய மாணவர், “நீட் யு.ஜி 2024 தேர்வெழுத விரும்புபவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து பாடத்திட்டத்தை முன்கூட்டியே அறிந்துக் கொண்டால், மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது மிகவும் நிம்மதியாக இருக்கும்,” என்றும் கூறினார்.

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு வேறு பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு வேறு பாடத்திட்டத்திற்கும் தயாராவது கடினம் என்றும் அந்த மாணவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய மற்றொரு MBBS மாணவி நிலாஞ்சனா டெகா, CBSEயின் நீக்கப்பட்ட பகுதிகளிலிருந்து படிக்கவும், போர்டு தேர்வுகளுக்கு தயாரவதற்கும் மிகவும் சிரமமாக இருந்தது என்று கூறினார். நிலாஞ்சனா டெகா தற்போது அசாமில் உள்ள ஜோர்ஹத் மருத்துவக் கல்லூரியில் உள்ளார்.

இதற்கிடையில், NEET UG 2024 தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - nmc.org.in இல் பாடத்திட்டத்தை சரிபார்க்கலாம்.

தேசிய தேர்வு முகமை முன்பு நீட் 2024 தேர்வு தேதியை அறிவித்தது. NEET UG மே 5, 2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முந்தைய ஆண்டின் போக்குகளின்படி, டிசம்பரில் NTA பதிவு செயல்முறையைத் தொடங்கலாம்.

NEET UG 2024 வினாத் தாள் நான்கு பாடங்களைக் கொண்டுள்ளது - இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது.

NEET UG பாடத்திட்டம் 2024 பாட வாரியாக மாற்றங்களை இங்கே பார்க்கலாம்:

NEET UG 2024 வேதியியல் பாடத்திட்டம்

சேர்க்கப்பட்ட தலைப்புகள்

- பி-பிளாக் கூறுகள்

- பரிசோதனை அடிப்படையிலான வேதியியல்

வேதியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட தலைப்புகள்

11 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவை

பொருளின் நிலைகள் (இயற்பியல் வேதியியல்)

ஹைட்ரஜன் (கனிம வேதியியல்)

எஸ்-பிளாக் (கனிம வேதியியல்)

சுற்றுச்சூழல் வேதியியல் (கரிம வேதியியல்)

12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவை

திட நிலை (இயற்பியல் வேதியியல்)

மேற்பரப்பு வேதியியல் (இயற்பியல் வேதியியல்)

உலோகம் (கனிம வேதியியல்)

அன்றாட வாழ்வில் பாலிமர் வேதியியல் (கரிம வேதியியல்)

இயற்பியலைப் பொறுத்தவரை, துறையின் நிபுணர்களின் கூற்றுப்படி, எந்த பாடமும் முழுமையாக நீக்கப்படவில்லை. NEET UG 2024 இயற்பியல் பாடத்திட்டத்தில் இருந்து ரோலிங் மோஷன் ரெனால்டின் எண், வெப்ப இயந்திரம் மற்றும் குளிர்சாதனப் பெட்டி, கட்டாயம் மற்றும் தணிக்கப்பட்ட அலைவு மற்றும் டாப்ளர் விளைவு உள்ளிட்ட சில தலைப்புகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

NEET UG 2024 பாடத்திட்டம்: உயிரியல்

உயிரியலில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகள்

11 ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவை

ஆஞ்சியோஸ்பெர்ம்

இரண்டாம் நிலை வளர்ச்சி

சைலம் மற்றும் புளோயம் தவிர தாவரங்களில் போக்குவரத்து அம்சங்கள்

கனிம ஊட்டச்சத்து

வேர்னலைசேஷன் மற்றும் விதை செயலற்ற நிலை

உணர்வு உறுப்புகள்

செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்

12 ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவை

வகைபிரித்தல் உதவி

உயிரினங்களில் இனப்பெருக்கம்

உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உத்திகள்

வாரிசு

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்த கருத்துக்காக NMC-யை அணுகினோம், அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். NMC அதிகாரி பதிலளிக்கும் போது நகலை புதுப்பிப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment