/indian-express-tamil/media/media_files/2025/08/01/mbbs-students-2025-08-01-18-42-48.jpg)
அகில இந்திய மருத்துவக் கவுன்சலிங்கிற்கான முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேங்க் மற்றும் கட் ஆஃப் நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
அகில இந்திய கவுன்சலிங் முதல் சுற்று நிலவரம் குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.
அதன்படி, அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவில் தற்காலிக ஒதுக்கீட்டு விபரங்கள் வெளியாகியுள்ளன.
எம்.பி.பி.எஸ் - அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் முதல் சுற்று நிலவரம்
முதல் சுற்று ரேங்க்
பொதுப் பிரிவு - 21190
ஓ.பி.சி - 21452
இ.டபுள்யூ.எஸ் - 25599
எஸ்.சி - 110389
எஸ்.டி – 145625
முதல் சுற்று கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 534
ஓ.பி.சி - 534
இ.டபுள்யூ.எஸ் - 528
எஸ்.சி - 457
எஸ்.டி – 435
எம்.பி.பி.எஸ் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதல் சுற்று நிலவரம்
முதல் சுற்று ரேங்க்
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி - 263126
சவீதா மருத்துவக் கல்லூரி - 432358
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி - 496509
ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி - 733697
ஜே.ஆர் மருத்துவக் கல்லூரி – 734672
முதல் சுற்று கட் ஆஃப்
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி - 374
சவீதா மருத்துவக் கல்லூரி - 304
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி - 282
ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி - 215
ஜே.ஆர் மருத்துவக் கல்லூரி – 215
பி.டி.எஸ் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதல் சுற்று நிலவரம்
முதல் சுற்று ரேங்க்
சவீதா பல் மருத்துவக் கல்லூரி - 524471
ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி – 527087
தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி - 988990
முதல் சுற்று கட் ஆஃப்
சவீதா பல் மருத்துவக் கல்லூரி - 273
ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி – 272
தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி - 162
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.