/indian-express-tamil/media/media_files/5Vj3jiF6Jb72oIg3IwA0.jpg)
அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதில் அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கிற்கான முதல் சுற்று முடிவடைந்து, தற்போது இரண்டாம் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீடு விபரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்றில் கட் ஆஃப் குறைந்துள்ளதாக கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் தனது மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று முடிவுகளின்படி கட் ஆஃப் சற்று குறைந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான ரவுண்ட் 1 கட் ஆஃப்
பொதுப்பிரிவு – 534
ஓ.பி.சி – 534
இ.டபுள்யூ.எஸ் – 528
எஸ்.சி – 457
எஸ்.டி - 435
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான ரவுண்ட் 2 கட் ஆஃப்
பொதுப்பிரிவு – 529
ஓ.பி.சி – 528
இ.டபுள்யூ.எஸ் – 524
எஸ்.சி – 443
எஸ்.டி - 429
தனியார் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான ரவுண்ட் 1 கட் ஆஃப் 215 ஆக இருந்தது. அதேநேரம் ரவுண்ட் 2 கட் ஆஃப் 195 ஆக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us