அகில இந்திய மருத்துவக் கவுன்சலிங் ரவுண்ட் 2: தமிழகத்தில் 677 இடங்கள் காலி!

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்றுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6739 இடங்கள் காலி; தமிழகத்தில் 677 இடங்கள் காலியாக உள்ளன

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்றுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6739 இடங்கள் காலி; தமிழகத்தில் 677 இடங்கள் காலியாக உள்ளன

author-image
WebDesk
New Update
MBBS

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கிற்கான இரண்டாம் சுற்றுக்கான செயல்முறை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இரண்டாம் சுற்றுக்கு காலியாக உள்ள காலியிடங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தநிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 677 இடங்கள் காலியாக உள்ளதாக மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் தெரிவித்துள்ளார்.

வீடியோவின்படி, அகில இந்திய மருத்துவக் கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்றுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6739 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள 8651 இடங்களில் 22% இடங்களே முதல் சுற்றில் நிரம்பியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டில் முதல் சுற்றுக்கு 786 இடங்கள் இருந்தன. இதில் 13.9% இடங்கள் நிரம்பி இரண்டாம் சுற்றுக்கு 677 இடங்கள் காலியாக உள்ளன. 

Advertisment
Advertisements

அதேநேரம் தமிழகத்தில் உள்ள சுயநிதி பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் முதல் சுற்றுக்கு 2770 இடங்கள் இருந்தன. இதில் 58.2% இடங்கள் நிரம்பி இரண்டாம் சுற்றுக்கு 1159 இடங்கள் காலியாக உள்ளன. 

பாண்டிச்சேரியில் முதல் சுற்றுக்கு 800 இடங்கள் இருந்தன. இதில் 50.8 இடங்கள் நிரம்பி, இரண்டாம் சுற்றுக்கு 394 இடங்கள் காலியாக உள்ளன. 

எனவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெறலாம். கட் ஆஃப் மதிப்பெண்களை பொறுத்தவரை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருக்காது. அதேநேரம் தரவரிசை 1500 வரை குறைய வாய்ப்பு உள்ளது. 

NEET Exam Mbbs Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: