/indian-express-tamil/media/media_files/kEhkQqs3gKvLxsq1JZaa.jpg)
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
கேரியர் கைடன்ஸ் குரு என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, நீட் தேர்வுக்கு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://neet.nta.nic.in/ என்ற பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் அறிவிப்பு மற்றும் தகவல் குறிப்பேடுகளை முழுவதுமாக படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழக மாணவர்கள் விருப்ப மொழியை தேர்வு செய்யும்போது தமிழ் மொழியை தேர்வு செய்யுங்கள். ஏனெனில் தமிழ் என்று தேர்வு செய்தால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும். அதேநேரம் ஆங்கிலம் தேர்வு செய்தால் வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும்.
நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பொதுப்பிரிவினருக்கு ரூ. 1700, பொதுப்பிரிவு- இ.டபுள்யூ.எஸ் மற்றும் ஓ.பி.சி நான் கிரீமிலேயர் பிரிவுகளுக்கு ரூ. 1600, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகள் பிரிவுகளுக்கு ரூ. 1000.
திருத்தம் செய்ய விரும்புபவர்கள் மார்ச் 11 வரை செய்துக் கொள்ளலாம். ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்வு மைய நகரம் குறித்த தகவல் வெளியாகும். மே 1 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியாகும். மே 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு 180 வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறும். இயற்பியல், வேதியியலில் தலா 45 வினாக்கள் மற்றும் உயிரியலில் 90 வினாக்கள் இடம்பெறும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பொறுத்தவரை தலா 2 எண்ணிக்கையில் வேண்டும். மேலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ, கைவிரல் ரேகைகள், கையொப்பம், சாதிச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரிக்கான சான்று (ஆதார்), மாற்றுத்திறனாளி சான்று (தேவைப்படின்) போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் வகையில் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.