நீட் தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்த நீட் தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக நீட் தேர்வு மே மாதத்தில் நடத்தப்படும்.
இந்தநிலையில், இதற்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என்பதை இப்போது பார்ப்போம். இதுகுறித்து பயாலஜி சிம்பிளிஃபைடு சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் வாரத்தில், குறிப்பாக பிப்ரவரி 7 ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisement
மேலும் கடந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதாவது மே முதல் ஞாயிற்றுக்கிழமை, அந்த வகையில் இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.