NEET UG 2025: நீட் தேர்வுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

NEET UG 2025: நீட் தேர்வுக்கான தேர்வு மைய நகர சீட்டு வெளியீடு; தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை டவுன்லோடு செய்வது எப்படி என்பது இங்கே

NEET UG 2025: நீட் தேர்வுக்கான தேர்வு மைய நகர சீட்டு வெளியீடு; தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை டவுன்லோடு செய்வது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
New Update
NEET exam

தேசிய தேர்வு முகமை (NTA), நீட் தேர்வுக்கான (NEET UG 2025) சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் எனப்படும் நகர அறிவிப்பு சீட்டை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் வெளியிட்டுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதும் தேர்வர்கள், இந்த சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை பதிவிறக்குவதன் மூலம், தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நகரம் குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

நீட் தேர்வு மே 4, 2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஃப்லைன் (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்: எப்படி பதிவிறக்குவது?

Advertisment
Advertisements

தேர்வர்கள் அவர்களின் நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை அணுக, கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

படி 1: அதிகாரப்பூர்வ நீட் தேர்வு வலைத்தளத்தைப் பார்வையிடவும் - neet.nta.nic.in

படி 2: தேர்வர் செயல்பாட்டுப் பிரிவின் கீழ் உள்ள “NEET UG 2025 நகர அறிவிப்புச் சீட்டைப் பதிவிறக்கு” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் உட்பட உங்கள் உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும்

படி 4: சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை பதிவிறக்கி, தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மைய நகரத்தைச் சரிபார்க்கவும்

படி 5: எதிர்காலக் குறிப்புக்காக சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பின் ஒரு நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்

சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் என்பது, விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு நகரத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துக் கொள்வதாகும், இதன் மூலம் தேர்வர்கள் பயண ஏற்பாடுகளைச் செய்துக் கொள்ள முடியும். ஆனால் இது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அல்ல, அதாவது ஹால் டிக்கெட் இல்லை, மேலும் இதில் சரியான தேர்வு மையம் அல்லது இடம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்காது. நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ ஹால்டிக்கெட் அடுத்த வாரம், தேர்வு தேதிக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.

NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: