Advertisment

NEET UG 2025: நீட் தேர்வில் முந்தைய ஆண்டு வினாக்கள் மீண்டும் கேட்கப்படுகிறதா?

NEET UG 2025: நீட் தேர்வில் முந்தைய ஆண்டுகளின் வினாக்கள் கேட்கப்படுகிறதா? முந்தைய ஆண்டு வினாக்களை பயிற்சி செய்வதால் என்ன நன்மை?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET 1

நீட் தேர்வு

கட்டுரையாளர்: கௌரவ் சர்மா

Advertisment

தேசிய தேர்வு முகமை (NTA) இந்தியாவின் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்காகவே படிக்கிறார்கள், மேலும் பலர் தேசிய தேர்வு முகமை முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இருந்து கேள்விகளை மீண்டும் கேட்கிறதா இல்லையா என்று கேட்கிறார்கள்.

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2025: Does NTA ask repeated questions?

தேசிய தேர்வு முகமை முந்தைய ஆண்டு வினாக்களை அப்படியே கேட்பதில்லை; மாறாக, ஒத்த வடிவங்களை அடிக்கடி பயன்படுத்துகிறது. தேசிய தேர்வு முகமை பெரும்பாலும் முந்தைய ஆண்டுகளில் இருந்து பொதுவான தலைப்புகள், கருத்துக்கள் அல்லது கேள்விகளின் வகைகளைப் பின்பற்றுகிறது. உதாரணமாக, ஒரு பழைய வினாத்தாளில் சில குறிப்பிட்ட சூத்திரம் அல்லது கருத்து மிகவும் பொருத்தமானதாக இருந்தால், அதுதொடர்பான கேள்விகள் பெரும்பாலும் மீண்டும் கேட்கப்படும்.

Advertisment
Advertisement

ஏன் இப்படி?

பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு கேள்விகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தில் இருந்து பெறப்பட்டவை. பாடத்திட்டம் குறைவாக இருப்பதால் முற்றிலும் புதிய கேள்விகளுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.

முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துங்கள்

நீட் தேர்வு அடிப்படைத் தலைப்புகள் பற்றிய மாணவர்களின் அறிவை சோதிக்கிறது. இதன் பொருள், மரபியல், இயக்கவியல் மற்றும் வேதியியல் பிணைப்பு போன்ற சில முக்கிய பகுதிகள் எப்போதும் கவனம் செலுத்துகின்றன.

- பெரும்பாலும் பின்வரும் வகைகளின் கேள்விகள் வினாத்தாளில் நிச்சயம் இருக்கும்: பரம்பரை வடிவங்கள், டி.என்.ஏ அமைப்பு, உயிரியலில் தாவர உடலியல்.

- தனிம வரிசை அட்டவணை கேள்விகள், இரசாயன எதிர்வினை வகைகள் அல்லது கரிம வேதியியல் வழிமுறைகள் தொடர்பான கேள்விகள் பெரும்பாலும் வேதியியலில் மீண்டும் மீண்டும் வருகின்றன.

- நியூட்டனின் விதிகள், இயக்கம் மற்றும் வெப்ப இயக்கவியல் ஆகியவை கிட்டத்தட்ட அனைத்து இயற்பியல் வினாத்தாளிலும் இருப்பதாகத் தெரிகிறது.

முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்யுங்கள்

கடந்த ஆண்டு நீட் வினாத்தாள்களை படிப்பதன் மூலம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இது செயல்திறன் மற்றும் துல்லியம் ஆகிய இரண்டிற்கும் உதவுகிறது.

அதிக வெயிட்டேஜ் தலைப்புகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவற்றிலிருந்து பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரே மாதிரியான பதில்களைக் கொடுக்க, பதில்களை மனப்பாடம் செய்யாமல், கருத்தியல் புரிதலைப் பயிற்சி செய்யுங்கள்.

(டாக்டர் கௌரவ் ஷர்மா மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர், வித்யாமந்திர் வகுப்புகள்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment