எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; தமிழக மருத்துவ கல்லூரிகளில் 7.5% பிரிவினருக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப், ரேங்க் என்ன?

Tamil Nadu MBBS Admission: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% பொது பிரிவுக்கு எந்த கட் ஆஃப், ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்?

Tamil Nadu MBBS Admission: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% பொது பிரிவுக்கு எந்த கட் ஆஃப், ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்?

author-image
WebDesk
New Update
mbbs students aiq

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு எந்த கட் ஆஃப், ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? என்பதை கிளாசிக் நீட் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் பெரியசாமி விளக்கியுள்ளார்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 5175 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 856 இடங்கள் போக மீதம் 4319 இடங்கள் மாநில கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக, 92.5% பொது பிரிவு கலந்தாய்வுக்கு 3995 இடங்கள் உள்ளன. 7.5% அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 495 இடங்கள் உள்ளன.

Advertisment
Advertisements

7.5% இடஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 457

பி.சி – 407

பி.சி.எம் – 402

எம்.பி.சி – 431

எஸ்.சி – 397

எஸ்.சி.ஏ – 392

எஸ்.டி – 389

7.5% இடஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்

பொதுப் பிரிவு – 154

பி.சி – 187

பி.சி.எம் – 24

எம்.பி.சி – 180

எஸ்.சி – 80

எஸ்.சி.ஏ – 17

எஸ்.டி – 6

Mbbs Counselling NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: