/indian-express-tamil/media/media_files/fQ1UMf4QZmsJ2eSII8A0.jpg)
நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு எனப்படும் அட்மிட் கார்டில் என்ன இருக்கும்? எவற்றை எல்லாம் நிரப்ப வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4, 2025 அன்று ஆஃப்லைன் முறையில் நடைபெறும். இது எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களுக்கு போட்டியிட லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு எனப்படும் அட்மிட் கார்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், தங்கள் உள்நுழைவுச் சான்றுகளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில், அட்மிட் கார்டில் என்ன இருக்கும்? எவற்றை எல்லாம் நிரப்ப வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி,
நீட் அட்மிட் கார்டில் 3 பக்கங்கள் இருக்கும். முதல் பக்கத்தில் தேர்வு குறித்த உங்கள் தனிப்பட்ட தகவல்கள், இரண்டாம் பக்கத்தில் புரஃபார்மா மற்றும் மூன்றாம் பக்கத்தில் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருக்கும். வழிகாட்டுதல் பக்கத்தை பிரிண்ட் செய்து தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லலாம். தேவையில்லை என்றால் அங்கு அதனை நீக்கிவிடுவார்கள்.
உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை நீங்கள் அட்மிட் கார்டில் ஒட்டி எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் இடது கைவிரல் ரேகையும் பதிவு செய்துக் கொள்ளுங்கள். அதேநேரம் கையெழுத்து தேர்வுக் கூடத்தில் தான் போட வேண்டும். இரண்டாம் பக்கத்தில் போஸ்ட் கார்டு சைஸ் போட்டோவை நீங்கள் ஓட்டி எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து கையெழுத்தும் தேர்வுக் கூடத்தில் மட்டுமே போட வேண்டும். அதற்கு முன்னர் போட வேண்டாம்.
தேர்வுக்கூடத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்லுங்கள். தாமதமாக சென்றால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டீர்கள். அட்மிட் கார்டு, புகைப்படம், அடையாள சான்று (ஆதார்) ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள். வெளிப்படையான தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம். அதைத் தவிர பிற பொருட்கள் அனுமதி கிடையாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.