தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; டாப் அரசு மருத்துவ கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்?
Tamil Nadu MBBS Admission: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? முழு விளக்கம் இங்கே
Tamil Nadu MBBS Admission: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? முழு விளக்கம் இங்கே
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டாப் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்த அகில இந்திய ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இந்தாண்டு ஜூன் 6 தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 5 அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.
அதன்படி, டாப் 5 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு அகில இந்திய தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டு ரேங்க் நிலவரம் இருக்கும்.