NEET UG 2025: 15% அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?

NEET UG 2025 Expected Cut Off: அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவுக்கு 15% இடங்கள் ஒதுக்கீடு; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு

NEET UG 2025 Expected Cut Off: அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவுக்கு 15% இடங்கள் ஒதுக்கீடு; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு

author-image
WebDesk
New Update
neet

நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 15% இடங்களில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. 

இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 15% இடங்களில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

வீடியோவின்படி, இது இறுதியான கட் ஆஃப் அல்ல. எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மட்டுமே. தேர்வின் சிரமநிலை, நீளமான குழப்பமான கேள்விகள் அடிப்படையிலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 70000க்கும் குறைவானவர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த கட் ஆஃப் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 4000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 600 இடங்கள் அதிகரிக்கும்.

2024 ஆம் ஆண்டு கட் ஆஃப் நிலவரம்

பொதுப் பிரிவு - 652

ஓ.பி.சி - 652

இ.டபுள்யூ.எஸ் - 649

எஸ்.சி - 549

எஸ்.டி – 526

இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 595 - 605

ஓ.பி.சி – 595 - 605

இ.டபுள்யூ.எஸ் – 590 - 600

எஸ்.சி – 465 - 485

எஸ்.டி – 435 - 455

Mbbs NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: