/indian-express-tamil/media/media_files/2025/04/07/TXjoMldLL9EigrUnskaH.jpg)
நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். தேர்வுக்கு அதிக நேரம் தேவைப்பட்டதாகவும், நேரடி கேள்விகள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5453 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 720.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் நீட் தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இயற்பியல் கடினமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு வினாத்தாளை விட கடினமாக இருந்தது. தேர்வு ஒட்டுமொத்தமாக கடினமாக இருந்தது. நேரம் போதவில்லை. கேள்விகள் நீளமானதாக இருந்ததால் முழுமையாக தேர்வை முடிக்கவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர்.
தேர்வை பொறுத்தவரை இயற்பியல் கடினம், வேதியியல் ஆவரேஜ், உயிரியல் ஈஸி. இருப்பினும் நீளமான கேள்விகளாக இருந்தது. இதனால் கண்டிப்பாக கட் ஆஃப் குறையும். 2024 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்-ஐ விட இந்த கட் ஆஃப் நிச்சயம் குறையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.