நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வாகும்.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, தேசிய தேர்வு முகமை அடுத்ததாக, மாணவர்களின் ஓ.எம்.ஆர் தாள்களை வெளியிடும். அடுத்ததாக தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிடும். மேலும் அதில் விடைகளை சவால் செய்வதற்கான விருப்பங்களை வழங்கும். இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். பின்னர் விடைகள் இறுதி செய்யப்பட்டு இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடும். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டை வெளியிடப்படும்.
Advertisment
Advertisements
அந்த வகையில் ஓ.எம்.ஆர் தாள்கள் ஜுன் 1 ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது. தற்காலிக விடைக்குறிப்புகளும் அன்றைய தினமே வெளியிடப்படும். விடைகளை சவால் செய்ய ஜூன் 3 வரை கால அவகாசம் கொடுக்கப்படும். இறுதி விடைக்குறிப்புகள் ஜூன் 11 ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அன்றைய தினமே நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டை வெளியிடப்படவும் வாய்ப்புள்ளது.