தேசிய தேர்வு முகமை (NTA), இளங்கலை (NEET UG 2025) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான தேதிகளை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை பிப்ரவரி 7, 2025 அன்று தொடங்கியது மற்றும் மார்ச் 7 ஆம் தேதி (இன்று) வரை விண்ணப்பிக்கலாம். மேலும், நீட் தேர்வு அட்மிட் கார்டு மே 1, 2025 அன்று வழங்கப்படும், நீட் தேர்வு மே 4, 2025 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறும்.
இதனையடுத்து தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செயல்முறை இன்று மார்ச் 7, 2025 முடிவடையும் நிலையில் திருத்தச் சாளரம் மார்ச் 9 ஆம் தேதி திறக்கப்படும். நீட் தேர்வுக்கான திருத்தச் சாளரம் மார்ச் 9 முதல் மார்ச் 11, 2025 வரை கிடைக்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடலாம்.
எவற்றை திருத்தலாம்?
தந்தை பெயர் மற்றும் கல்வித் தகுதி/ தொழில் அல்லது தாயின் பெயர் மற்றும் கல்வித் தகுதி/ தொழில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக, கல்வித் தகுதி விவரங்கள் (வகுப்பு 10 மற்றும் 12), தகுதி நிலை, சாதிப் பிரிவு, துணைப் பிரிவு/ மாற்றத்திறனாளி, கையொப்பம், நீட் தேர்வுக்கு இதுவரை எத்தனை முறை முயற்சித்து உள்ளீர்கள் போன்றவற்றில் மாற்றம் செய்யலாம் அல்லது கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.
மேலும், நிரந்தர மற்றும் தற்போதைய முகவரிகளின் அடிப்படையில் தேர்வு நகர விருப்பம், தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை மாற்றலாம்.
NEET UG 2025: பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில், ‘NEET (UG)-2025 பதிவு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவம்’ என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்.
படி 4: உங்கள் விபரங்களைப் பதிவுசெய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப தொடரவும்.
படி 5: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: எதிர்கால குறிப்புக்காக உங்கள் விண்ணப்பத்தின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு, தேர்வர்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.