NEET UG 2025: நீட் தேர்வு உயிரியல் பாடத்தில் 320+ எடுக்க… 20 நாட்களில் இப்படி படிங்க!
NEET UG 2025: நீட் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு; உயிரியல் பாடத்தை 20 நாட்களில் இப்படி படித்தால் எம்.பி.பி.எஸ் சீட் உறுதி; படிப்பு திட்டத்தை விளக்கும் நிபுணர்
NEET UG 2025: நீட் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு; உயிரியல் பாடத்தை 20 நாட்களில் இப்படி படித்தால் எம்.பி.பி.எஸ் சீட் உறுதி; படிப்பு திட்டத்தை விளக்கும் நிபுணர்
நீட் தேர்வு இன்னும் 20 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், உயிரியல் பாடத்தில் 320க்கும் மேல் மதிப்பெண் எடுக்க எப்படி படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.
நீட் தேர்வில் உயிரியல் முக்கிய பாடமாகும். இதில் 360 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். மேலும் இயற்பியல் மற்றும் வேதியியலை ஒப்பிடுகையில் எளிதாக இருக்கும். உயிரியியலில் 320க்கும் மேல் மதிப்பெண் எடுப்பது ஒட்டுமொத்த மதிப்பெண்ணை அதிகரித்து, எம்.பி.பி.எஸ் வாய்ப்பை உறுதி செய்யும்.
Advertisment
Advertisements
இந்தநிலையில், 20 நாட்களில் எப்படி படித்தால் உயிரியியலில் 320க்கு மேல் மதிப்பெண் பெறலாம் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. வீடியோவின்படி,
மரபியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் இடம்பெறும். இதிலுள்ள 3 பிரிவிகளுக்கு 3 நாட்கள் ஒதுக்குங்கள். உயிரி தொழில்நுட்பத்தில் 8 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 1.5 நாள் எடுத்துக் கொள்ளுங்கள். செல் சுழற்சி பாடத்திற்கு அரை நாள் எடுக்கலாம். உயிரி மூலக்கூறு பாடத்திற்கு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம். விலங்கு அமைப்பு, விலங்கு உலகம் பாடங்களுக்கு தலா ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம். இந்த 4 பாடங்களில் 18 கேள்விகள் இடம்பெறும்.
தாவர இனப்பெருக்கம், மனித இனப்பெருக்கம், மனித நோய்கள், தாவர உருவவியல் பாடங்களில் ஒட்டுமொத்தமாக 16 கேள்விகள் இடம்பெறலாம். இதில் மனித நோய்கள் பாடத்திற்கு அரை நாள் மற்றும் மற்ற பாடங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
தாவர உடலியல் பகுதிகளுக்கு 2.5 நாட்கள், மனித உடலியல் பகுதிகளுக்கு 3 நாட்கள், சூழியியல் பகுதிகளுக்கு 2.5 நாட்கள் ஒதுக்குங்கள். இந்த பகுதிகளில் 28 கேள்விகள் வரை கேட்கப்படலாம். இவ்வாறாக 20 நாட்கள் படித்தால் 320க்கு மேல் மதிப்பெண் பெறலாம். இங்கு ஒருநாள் என்பது உயிரியல் பகுதிக்கான 3 மணி நேரமாக கணக்கிட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் பிற பாடங்களை படிக்க வேண்டும் மற்றும் மாதிரி தேர்வு எழுத வேண்டும்.