நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்துள்ள நிலையில், சிட்டி இண்டிமேசன் ஸ்லிப், ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? தயாராக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணங்கள் எவை? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு சிட்டி இண்டிமேசன் ஸ்லிப், ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும், செக் செய்ய வேண்டிய விபரங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். இதுகுறித்த விபரங்கள் வெற்றித் தமிழ் நீட் அகாடமி யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 26 ஆம் தேதி, தேர்வு மைய நகர சீட்டு எனப்படும் சிட்டி இண்டிமேசன் ஸ்லிப்பை வெளியிடும். இதில் உங்களுக்கான நீட் தேர்வு எந்த நகரத்தில் நடைபெறும் என்ற தகவல்கள் அடங்கியிருக்கும். இந்த ஸ்லிப்பில், தேர்வு மைய மாவட்டம், புகைப்படம், கையெழுத்து, விண்ணப்பப் பதிவெண், தேர்வு நாள், வினாத்தாள் மொழி போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதில் தேர்வு மையம் குறித்த விபரங்கள் இடம்பெற்றிருக்காது.
Advertisment
Advertisements
மேலும் இந்த ஸ்லிப்பில் பொது அறிவுரைகள் இடம்பெற்றிருக்கும். அதன்படி, மாணவர்கள் லேபிள் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லலாம். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஹால் டிக்கெட், பெற்றோர் கையொப்பம், அடையாள அட்டை போன்றவற்றை எடுத்து வர கோரியிருக்கும்.
தொடர்ந்து பாலினம், தந்தை பெயர், பிறந்த தேதி, மாற்றுதிறனாளி நிலை, உதவியாளர் விபரம், தேர்வு நேரம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் தேர்வு மையத்திற்கு வர வேண்டிய நேரம், தடைசெய்யப்பட்ட பொருட்கள் போன்ற விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1 ஆம் தேதி வெளியிடப்படும்.