NEET UG 2025: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? கடந்த ஆண்டு ரேங்க் நிலவரம் என்ன?

NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கடந்த ஆண்டு எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது? நிபுணர் விளக்கம்

NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கடந்த ஆண்டு எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது? நிபுணர் விளக்கம்

author-image
WebDesk
New Update
NEET

நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொதுக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? கடந்த ஆண்டு எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வாகும். 

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொதுக் கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் டாக்டர் அனந்தமூர்த்தி விளக்கியுள்ளார்.

இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்

Advertisment
Advertisements

பொதுப் பிரிவு – 570 - 590

பி.சி – 520 - 540

பி.சி.எம் – 500 - 520

எம்.பி.சி – 490 - 510

எஸ்.சி – 400 - 420

எஸ்.சி.ஏ – 360 - 380

எஸ்.டி – 340 - 360

2024 ரேங்க் நிலவரம்

பொதுப் பிரிவு – 1414

பி.சி – 2017

பி.சி.எம் – 208

எம்.பி.சி – 1093

எஸ்.சி – 726

எஸ்.சி.ஏ – 133

எஸ்.டி – 44

Mbbs NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: