/indian-express-tamil/media/media_files/5Vj3jiF6Jb72oIg3IwA0.jpg)
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 92.5% பொது பிரிவுக்கு எந்த கட் ஆஃப், ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது பிரிவு கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? என்பதை கிளாசிக் நீட் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் பெரியசாமி விளக்கியுள்ளார்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 5175 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 856 இடங்கள் போக மீதம் 4319 இடங்கள் மாநில கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக, 92.5% பொது பிரிவு கலந்தாய்வுக்கு 3995 இடங்கள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 539
பி.சி – 510
பி.சி.எம் – 504
எம்.பி.சி – 496
எஸ்.சி – 443
எஸ்.சி.ஏ – 401
எஸ்.டி – 406
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்
பொதுப் பிரிவு – 1238
பி.சி – 1816
பி.சி.எம் – 194
எம்.பி.சி – 1074
எஸ்.சி – 644
எஸ்.சி.ஏ – 123
எஸ்.டி – 40
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.