தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; தனியார் கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?
Tamil Nadu MBBS Admission: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 92.5% மற்றும் 7.5% பிரிவுக்கு எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்?
Tamil Nadu MBBS Admission: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 92.5% மற்றும் 7.5% பிரிவுக்கு எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்?
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 5175 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 856 இடங்கள் போக மீதம் 4319 இடங்கள் மாநில கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக, 92.5% பொது பிரிவு கலந்தாய்வுக்கு 3995 இடங்கள் உள்ளன.
இந்தநிலையில், தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த ஆண்டு 650க்கு மேல் 4 பேர், 600க்கு மேல் 111 பேர், 550க்கு மேல் 858 பேர், 500க்கு மேல் 3868 பேர், 450க்கு மேல் 9331 பேர், 400க்கு மேல் 15517 பேர், 350க்கு மேல் 21396 பேர், 300க்கு மேல் 26812 பேர் உள்ளனர்.