NEET UG 2025: தனியார் மருத்துவ பல்கலை.களில் எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க் என்ன? கடந்த ஆண்டு நிலவரம் இதுதான்!
NEET UG 2025 Expected Cut Off: தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்த எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? கடந்த ஆண்டு எந்த ரேங்க் வரை கிடைத்தது? நிபுணர் விளக்கம்
NEET UG 2025 Expected Cut Off: தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்த எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? கடந்த ஆண்டு எந்த ரேங்க் வரை கிடைத்தது? நிபுணர் விளக்கம்
நீட் தேர்வு தற்காலிக விடைக்குறிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், சுயநிதி அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க் என்ன? கடந்த ஆண்டுகளில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வாகும்.
இந்தநிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க் என்ன என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் டாக்டர் அனந்தமூர்த்தி விளக்கியுள்ளார். வீடியோவின்படி, தமிழகத்தில் 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன.