/indian-express-tamil/media/media_files/2025/05/04/E2Mp5LIIhDFsMWRSYk3g.jpg)
நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொதுக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொதுக் கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, இது இறுதியான கட் ஆஃப் அல்ல. எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மட்டுமே.
2024 ஆம் ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு - 650
பி.சி - 618
பி.சி.எம் - 611
எம்.பி.சி - 602
எஸ்.சி - 530
எஸ்.சி.ஏ - 463
எஸ்.டி – 477
இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 550 - 570
பி.சி – 515 - 535
பி.சி.எம் – 490 - 515
எம்.பி.சி – 485 - 510
எஸ்.சி – 420 - 440
எஸ்.சி.ஏ – 360 - 380
எஸ்.டி – 320 - 340
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.