தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; 92.5% கலந்தாய்வுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?
NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொது கலந்தாய்வுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொது கலந்தாய்வுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% பொது கலந்தாய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்த வரை கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும்.
இந்த நீட் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளின் படி, கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்கள் பிரிவு வாரியாக 120 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 92.5% கலந்தாய்வுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.