NEET UG 2025: நீட் ஆன்சர் கீ வெளியீடு; தமிழக மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?
NEET UG 2025 Expected Cut Off: நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு; தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
NEET UG 2025 Expected Cut Off: நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு; தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் எனும் ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஓ.எம்.ஆர் தாளின் நகல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை மிஸ்பா கேரியர் அகாடமி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.