NEET UG 2025: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்?
NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு
நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 7.5% இடஒதுக்கீட்டு பிரிவுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வாகும்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 7.5% இடஒதுக்கீட்டு பிரிவுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, இது இறுதியான கட் ஆஃப் அல்ல. எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மட்டுமே. இது சில தரவுகள் மற்றும் தேர்வின் சிரம நிலை அடிப்பிடையிலான கட் ஆஃப் ஆகும்.