/tamil-ie/media/media_files/uploads/2023/04/MBBS-from-Bangladesh.jpg)
நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் சேர்க்கைப் பெற எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் நாடு முழுவதும் நடைபெற்றது. எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியமாகும்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் சேர்க்கைப் பெற 92.5% பொதுக் கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, இது இறுதியான கட் ஆஃப் அல்ல. எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மட்டுமே.
22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு - 606
பி.சி - 583
பி.சி.எம் - 578
எம்.பி.சி - 574
எஸ்.சி - 494
எஸ்.சி.ஏ - 418
எஸ்.டி – 407
4 சுயநிதி மருத்துவ பல்கலைக்கழகங்களில் 2024 ஆம் ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு - 583
பி.சி - 578
பி.சி.எம் - 575
எம்.பி.சி - 569
எஸ்.சி - 485
எஸ்.சி.ஏ - 414
எஸ்.டி – 403
தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2025 ஆம் ஆண்டு 92.5% பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 490 - 520
பி.சி – 470 - 480
பி.சி.எம் – 460 - 470
எம்.பி.சி – 465 - 475
எஸ்.சி – 360 - 380
எஸ்.சி.ஏ – 320 - 340
எஸ்.டி – 310 - 320
தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2025 ஆம் ஆண்டு 7.5% பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 520 - 530
பி.சி – 375 - 385
பி.சி.எம் – 345 - 355
எம்.பி.சி – 385 - 400
எஸ்.சி – 350 - 360
எஸ்.சி.ஏ – 350 - 360
எஸ்.டி – 350 – 360
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.