/indian-express-tamil/media/media_files/AVY5V9SEuYtYVqM0SrGx.jpg)
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எம்.பி.சி பிரிவினருக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.சி பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும் என கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார். அதில் முதல் சுற்றுக்கான கட் ஆஃப் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.சி பிரிவுக்கு கல்லூரி வாரியான கட் ஆஃப் விவரம்
1). மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை - 579
2). ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 564
3). கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 557
4). ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை - 549
5). கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 546
6). மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 547
7). செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 540
8). தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் – 540
9). அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 535
10). அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் - 535
11). கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி – 532
12). திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 528
13). வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் – 529
14). இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை - 524
15). அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு – 522
16). தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி – 524
17). விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 524
18). தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 522
19). திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 519
20). அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் - 517
21). தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 514
22). கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் – 513
23). கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் - 511
24). கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி - 511
25). அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் - 512
26). திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் – 505
27). புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை – 509
28). சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 505
29). அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் - 505
30). அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி - 506
31). அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் - 502
32). அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் - 500
33). அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி - 501
34). அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் - 502
35). அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் - 498
36). அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் - 497
37). அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி - 497
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.