/indian-express-tamil/media/media_files/J0Dki5eWz6jWK1PIdSUT.jpg)
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அகில இந்திய தரவரிசை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும்.
இந்தநிலையில் நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் எனும் ஆன்சர் கீ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்கள் ஓ.எம்.ஆர் தாளின் நகல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதற்கிடையில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அகில இந்திய தரவரிசை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
ஜூன் 14 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, அகில இந்திய தரவரிசையும் வெளியிடப்படும். தமிழக கவுன்சலிங்கிற்கான தரவரிசை விண்ணப்பப் பதிவு முடிந்து, பரிசீலனைக்குப் பின்னரே வெளியிடப்படும்.
அதேநேரம் கடந்த ஆண்டு எந்த அகில இந்திய தரவரிசை வரை தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது என்பதை தெரிந்துக் கொண்டால், இந்த ஆண்டு எந்த ரேங்க் வரை கிடைக்கும் என்பதை கணிக்கலாம்.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டு அகில இந்திய ரேங்க் நிலவரம்
பொதுப் பிரிவு – 26136
பி.சி – 56682
பி.சி.எம் – 64326
எம்.பி.சி – 74293
எஸ்.சி – 162891
எஸ்.சி.ஏ – 260741
எஸ்.டி – 238938
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில ரேங்க் நிலவரம்
பொதுப் பிரிவு – 1414
பி.சி – 3331
பி.சி.எம் – 3781
எம்.பி.சி – 4486
எஸ்.சி – 10635
எஸ்.சி.ஏ – 15681
எஸ்.டி – 14702
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில இடஒதுக்கீடு அடிப்படையில் ரேங்க் நிலவரம்
பி.சி – 2031
பி.சி.எம் – 208
எம்.பி.சி – 1093
எஸ்.சி – 728
எஸ்.சி.ஏ – 133
எஸ்.டி – 44
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.