தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்?
NEET UG 2025: தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? நிபுணர் கணிப்பு
NEET UG 2025: தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்? நிபுணர் கணிப்பு
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எந்த வரை ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும். இந்த நீட் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அனந்தமூர்த்தி தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகள் எதிர்பார்க்கப்படும் ரேங்க்
Advertisment
Advertisements
பொதுப் பிரிவு – 28000 - 32000
பி.சி – 60000 - 64000
பி.சி.எம் – 78000 – 82000
எம்.பி.சி – 84000 - 88000
எஸ்.சி – 170000 - 175000
எஸ்.சி.ஏ – 240000க்கும் கீழ்
எஸ்.டி – 300000க்கும் கீழ்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்பார்க்கப்படும் ரேங்க்