நீட் தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், எப்படி படித்தால் வெற்றி பெறலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், ஒரு மாதத்தில் எப்படி படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. வீடியோவின்படி,
Advertisment
Advertisements
உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் தலா 2 மணி நேரம் என 6 மணி நேரம் படிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 10 மணி நேரம் கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய பாட வாரியான மற்றும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி அதிகமாக செய்யும்போது, தவறு இல்லாமல் தேர்வில் விடையளிக்கலாம். மேலும் பயிற்சி முடிந்தப் பின்னர் அதனை பகுப்பாய்வு செய்து, தவறு செய்தவற்றை கண்டறிய வேண்டும்.
ஆன்லைனில் பயிற்சி செய்வதை விட ஆஃப்லைனில் எழுதுவதே சிறந்தது. குறைந்தப்பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பகுப்பாய்வு செய்ய வேண்டும். இப்படி செய்வது தேர்வு குறித்த தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும் சரியான சாப்பாடு மற்றும் சரியான தூக்கம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.